தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கீழ்கொடுங்கலூர் கிராமத்தில் மனுநீதி நாள்: தி.மலை ஆட்சியர் பங்கேற்பு! - திருவண்ணாமலை ஆட்சியர்

திருவண்ணாமலை: கீழ்கொடுங்கலூர் கிராமத்தில் மனுநீதி நாள் நிகழ்வில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

mass conduct students vandavasi tiruvannamalai  திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி  திருவண்ணாமலை ஆட்சியர்  திருவண்ணாமலைச் செய்திகள்
கீழ்கொடுங்கலூர் கிராமத்தில் மனுநீதி நாள்

By

Published : Feb 27, 2020, 2:45 PM IST

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த கீழ்கொடுங்கலூர் கிராமத்தில் மனுநீதி நாள் திருவிழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கே.எஸ். கந்தசாமி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவானது, கீழ்கொடுங்கலூர், மேல் கொடுங்கலூர், கோவமா, கீழ்ப்பாக்கம் மற்றும் உளுந்தை ஆகிய கிராமங்கள் பயன்பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

விழாவில் கலந்துகொண்ட ஆட்சியர், ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது எதிர்பாராத விதமாக மலைவாழ் மக்கள் ஒன்றுதிரண்டு மேளதாளத்துடன் மாவட்ட ஆட்சியருக்கு சால்வை அணிவித்தனர். இதன் பின்னர் கீழ்கொடுங்கலூர் அரசுப் பெண்கள் உயர்நிலைப் பள்ளிக்குச் சென்று அங்கு மாணவிகளுடன் சுமார் ஒரு மணிநேரம் உரையாற்றினார்.

கீழ்கொடுங்கலூர் கிராமத்தில் மனுநீதி நாள்

மேலும், மாணவிகளுடன் இணைந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். இதற்கு முன் நடைபெற்ற மனு நீதி நாள் விழாவில், மகளிர் திட்ட இயக்குனர் சந்திரா, செய்யாறு வருவாய் கோட்டாட்சியர் விமலா, வந்தவாசி வட்டாட்சியர் வாசுகி மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:நல்லகண்ணுவிற்கு வீடு ஒதுக்கி அரசாணை வெளியீடு!

ABOUT THE AUTHOR

...view details