தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தீபத்திருவிழா துப்புரவுப் பணி -  772 பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை! - கார்த்திகை தீபம் செய்திகள்

திருவண்ணாமலை: தீபத்திருவிழாவின் போது துப்புரவுப் பணியில் ஈடுபட்ட 772 துப்புரவு பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஊக்கத் தொகையை வழங்கி பாராட்டினார்.

thiruvannamalai
thiruvannamalai

By

Published : Dec 14, 2019, 10:15 AM IST

திருவண்ணாமலை தீபத் திருவிழாவின் போது சிறப்பாகப் பணியாற்றிய வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திண்டிவனம், கள்ளக்குறிச்சி, செய்யாறு, வந்தவாசி, விழுப்புரம், திருக்கோவிலூர் நகராட்சிகளைச் சேர்ந்த 772 துப்புரவு பணியாளர்களுக்கு பாராட்டு விழா திருக்கோவிலூர் சாலையில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் ஊக்கத் தொகையை வழங்கி பாராட்டிய போது

விழாவில் கலந்துகொண்ட ஆட்சியர் கந்தசாமி, துப்புரவு பணியாளர்களை பாராட்டிப் பேசி, அவர்களின் சிறப்பான பணியை பாராட்டும் விதமாக 772 பணியாளர்களுக்கும் புடவை, வேட்டியுடன் ஊக்கத்தொகையும் வழங்கினார். பின்னர் அனைவருக்கும் மதிய உணவு வழங்கி, அவர்களுடன் அமர்ந்து ஆட்சியர் மதிய உணவு உட்கொண்டார். விழாவில் ஓய்வு பெற்ற துப்புரவு பணியாளர்கள் சிலருக்கு ஓய்வூதிய தொகையும் வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: திருக்கார்த்திகை தீபத் திருவிழா சொக்கப்பனை எரிப்பு!

ABOUT THE AUTHOR

...view details