திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் அருள் என்பவரை ஆதரித்து திருவண்ணாமலை அண்ணாசிலை அருகில் கமல்ஹாசன் வாக்கு சேகரித்தார்.
மக்கள் மத்தியில் கமல்ஹாசன் பேசியதாவது:
திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் அருள் என்பவரை ஆதரித்து திருவண்ணாமலை அண்ணாசிலை அருகில் கமல்ஹாசன் வாக்கு சேகரித்தார்.
மக்கள் மத்தியில் கமல்ஹாசன் பேசியதாவது:
மத்தியில் யார் வேண்டுமானாலும் பிரதமராக வரட்டும். ஆனால் இந்த திருவண்ணாமலைக்கு என்ன செய்வீர்கள் என்று கேட்கும் நபரைத்தான் மக்கள் நீதி மய்யம் டெல்லிக்கு அனுப்பும். தமிழ்நாட்டில் அரசு நடத்த வேண்டிய பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் தனியாருக்கு தாரைவார்த்து விட்டு டாஸ்மாக் கடையை அரசு ஏற்று நடத்துகிறது.
தமிழ்நாட்டில் 50 ஆண்டு காலம் மாறி மாறி ஆட்சி செய்தவர்கள் பங்காளிகள் ஆவார்கள். அவர்கள் கிடைத்ததை சுருட்டத்தான் பார்ப்பார்கள். காமராஜருக்கு பின் தமிழ்நாட்டில் நல்லாட்சி இல்லை. இங்கு நல்லாட்சியை மக்கள் பார்த்து வெகுநாள் ஆகிவிட்டது. காமராஜர், காந்தி ஆகியோரின் பாதையில் நாங்கள் ஆட்சி செய்வோம். பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வரும் போதெல்லாம் 'கோ பேக் மோடி' என்று நான்கு முறை எதிர்ப்பு தெரிவித்தபோதும், 'கம்பேக் மோடி'யாக மீண்டும் மீண்டும் வருகிறார்.
மத்திய அரசு கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு எந்தவித நன்மையும் செய்யவில்லை. உலகில் குடிநீர் பிரச்னை பெரிதாக உள்ளது. குடிநீர் ஆதாரத்தை பாதுகாக்க வேண்டிய அவசியம், நம் கையில் உள்ளது. மாற்றத்திற்கான முதல் அடியை எடுத்து வைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.