திருவண்ணாமலை:ஆரணி அடுத்த களம்பூர் பேரூராட்சியில் 37ஆம் ஆண்டு காளை விடும் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த காளை விடும் திருவிழாவில் திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் சேலம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து சுமார் 300க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன.
இதில் சிறப்பாக ஓடிய காளைகளுக்குப் பரிசுகளும், ரொக்கப்பணமும் வழங்கப்பட்டன. மேலும் இந்த காளை விடும் விழாவில் ஆரணி, போளூர் மற்றும் வேலூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கலந்து கொண்டு காளைகளை அடக்கினர். இதில் காளைகள் முட்டியதில் 50க்கும் மேற்பட்ட நபர்களுக்குக் காயம் ஏற்பட்டது.