திருவண்ணாமலை : ஆரணி டவுன் களத்துமேட்டு தெருவில் ஆக-08 ஆம் தேதி
மாரியம்மன் கோவில் கூழ்வார்க்கும் திருவிழா நடைபெற்றது. இதில் களத்துமேட்டு கே.எம்.எஸ். கபடி குழுவினர் கபடி போட்டிக்கான பயிற்சி மேற்கொண்டனர்.
ஆரணி டவுன் களத்துமேட்டு தெருவை சேர்ந்த கபடி வீரர் வினோத்குமார் (34) என்பவர் பயிற்சி மேற்கொண்டார். கர்ணம் அடிக்கும் பயிற்சி மேற்கொண்ட போது அவர் திடீரென மயங்கி விழுந்தார்.
உடனடியாக அவரை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
கர்ணம் அடிக்கும் போது மயங்கி விழுந்த கபடி வீரர் மரணம் பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் நேற்று (ஆக-15) இரவு சிகிச்சை பலனின்றி கபடி வீரர் வினோத் உயிரிழந்தார். அவருக்கு சிவகாமி என்ற மனைவியும் சந்தோஷ், கலையரசன் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
இதையும் படிங்க : ஓங்கூர் பாலத்தை மிதமான வேகத்தில் கடக்கவும் - விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்