ஆரணி பள்ளிக்கூடத் தெருவில் 300க்கும் மேற்பட்ட காட்டுநாயக்கர் சமுதாயத்தினர் வசித்துவருகின்றனர். இவர்கள் தங்களுக்கு எஸ்டி சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக மனு அளித்துவந்தனர்.
ஆனால், இதுநாள் வரை அரசு அவர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கவில்லை. அச்சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு சாதி சான்றிதழ் இல்லாததால், அவர்கள் மேற்படிப்பிற்கு செல்லமுடியாத சூழல் நிலவிவருகிறது. மேலும், அரசாங்கப் பணிகளுக்கும் செல்லமுடியாத நிலை உள்ளது.
இந்த சூழலில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக மனு கொடுத்தும் சாதி சான்றிதழ் வழங்காததைக் கண்டித்தும், தங்களுக்கு எஸ்டி சாதி சான்றிதழ் வழங்கக் கோரியும் காட்டு நாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் தங்கள் குழந்தைகளுடன் ஆரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சாதிச்சான்றிதழ் வழங்கக் கோரி காட்டுநாயக்கர் சமுதாய மக்கள் உண்ணாவிரதப்போராட்டம் எங்கள் பிள்ளைகளுக்கு சாதி சான்றிதழ் வழங்கும்வரை உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியுள்ளனர்.
இதையும் படிங்க:திருச்சி விமான நிலையத்தில் ஒரே நாளில் 30கிலோ தங்கம் பறிமுதல்!