தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேலை வாங்கித் தருவதாகக்கூறி எங்களை ஏமாற்றினர் - ஆசிரியர்கள் மீது இளைஞர்கள் புகார்! - திருவண்ணாமலை வேலை வழக்கு

திருவண்ணாமலை: வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக ஆசிரியர் தம்பதியினர் மீது மாவட்ட ஆட்சியரிடம் இளைஞர்கள் புகாரளித்தனர்.

Job Fraud Case : Complaint on teachers for Cheating youngsters

By

Published : Nov 19, 2019, 2:44 AM IST

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த சோழவரம் அரசுப் பள்ளி ஆசிரியர் ஆயியப்பன். இவரது மனைவி ரமணிபாய். இவர்கள் இருவரும் மண்னூர் தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருன்றனர்.

ஆசிரியர்கள் இருவரும் சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் வேலை வாங்கித் தருவதாக மூளை சலவை செய்துள்ளனர்.

வேலை இல்லாமல் தவித்து வரும் இளைஞர்கள் எப்படியாவது வேலைக்குச் சென்று விட வேண்டும் என்ற ஆவலில், இந்த தம்பதியினரின் ஆசை வார்த்தையை நம்பி சுமார் ரூ. 60 லட்சத்திற்கும் மேல் பணம் கொடுத்துள்ளனர். ஆனால் இளைஞர்களுக்கு வேலை வாங்கித் தராமல் ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட இளைஞர்கள்

இந்நிலையில், ரூ. 60 லட்சத்திற்கும் மேல் வசூல் செய்து ஏமாற்றிய ஆசிரியர் தம்பதியினர் மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டுத்தர வேண்டும் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் இளைஞர்கள் புகார் மனு அளித்துள்ளனர்.

இதையும் படிங்க: இறந்த பெண் கணக்கில் 25 லட்சம் ரூபாய் அபேஸ் - கையும், களவுமாக சிக்கிய வங்கி அலுவலர்கள்

ABOUT THE AUTHOR

...view details