தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நகை அடகு கடை உரிமையாளர் கொலை: 3 பேர் கைது - நகை அடகு கடை உரிமையாளர் கொலை

திருவண்ணாமலை: நகை அடகு கடை உரிமையாளரை கொலை செய்த மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கொலையாளிகள்
கொலையாளிகள்

By

Published : Jun 6, 2020, 3:45 PM IST

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி பொட்டி நாயுடு தெருவைச் சேர்ந்தவர் அசோக சக்கரவர்த்தி. இவர், வந்தவாசி அடுத்த தேசூர் பகுதியில் நகை அடகு கடை வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில், மே 25ஆம் தேதி மதியம் கடையைப் பூட்டிக் கொண்டு வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

அப்போது அசோக சக்கரவர்த்தி நண்பரான அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்பவரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, நான் அனுப்பும் நபரிடம் ஒன்றரை லட்சம் ரூபாய் கொடுக்குமாறு கூறியுள்ளார். இதையடுத்து சதீஷ் அவர் அனுப்பிய நபரிடம் ஒன்றரை லட்ச ரூபாய் கொடுத்துள்ளார்.
இதேபோல் அசோக சக்கரவர்த்தி மனைவி நிர்மலாவிடம் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு நான் அனுப்பும் நபரிடம் 2 லட்சம் ரூபாய் கொடுக்குமாறு கூறி உள்ளார். அவர் மனைவியும் கணவர் அனுப்பிய நபரிடம் 2 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். இந்த நிலையில் அசோக சக்கரவர்த்தி வெகுநேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை.

கொலையாளிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட வெள்ளி, தங்க நகைகள்.
மேலும் அசோக சக்கரவர்த்தியின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. பல இடங்களிலும் தேடி கிடைக்காததால் அசோக் சக்கரவர்த்தியின் மனைவி நிர்மலா தேசூர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து டிஎஸ்பி தங்கராமன் தலைமையில், 2 தனிப்படைகள் அமைத்து நகை அடகு வியாபாரி அசோக சக்கரவர்த்தி வைத்திருந்த செல்போன் மூலம் கால் ட்ராக் செய்தனர்.
கொலையான நகை அடகு கடை உரிமையாளர்.

இதனையடுத்து வந்தவாசி அடுத்த மொலப்பட்டு பகுதியைச் சேர்ந்த திருநாவுக்கரசு, தெள்ளார் பகுதியைச் சேர்ந்த முருகன், கவியரசு ஆகிய மூன்று நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் மூன்று பேரிடம் நடத்தி விசாரணையில், அசோக் சக்கரவர்த்தியை கடத்திக்கொண்டு கொலை செய்து அகரகொரக்கோட்டை கிராமத்திலுள்ள ஹாலோ பிளாக் தயாரிக்கும் கம்பெனி அருகே புதைத்து விட்டோம் என்று கூறினர்.

காவல்துறையினரால் கைதான கொலையாளிகள்..
உடனே காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று அசோக் சக்கரவர்த்தி உடலை தோண்டி எடுத்து உடற்கூறாய்வு செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் 3 நபர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து 16 சவரன் தங்க நகைகள், அரை கிலோ வெள்ளி பொருள்கள், 2.80 லட்சம் ரூபாய் பணம் கடத்தலுக்குப் பயன்படுத்திய கார், இரு சக்கர வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும் தப்பியோடிய முக்கிய குற்றவாளி ஒருவரை காவலர்கள் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details