தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜீப் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்... - திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

திருவண்ணாமலை அருகே இரு சக்கர வாகனத்தை கடந்த செல்ல முயன்ற ஜீப் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தின் சிசிடிவி வெளியாகி உள்ளது.

ஜீப் விபத்து
ஜீப் விபத்து

By

Published : Nov 28, 2022, 9:43 AM IST

திருவண்ணாமலை: செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அடுத்த ராமாபுரம், மோகலவாடி பகுதியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. வேலூரில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தன் மனைவி, மகன், மகள் ஆகியோருடன் ஜீப்பில் சென்று கொண்டு இருந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த சென்னாவரம் - மேல்மருவத்தூர் சாலையில் சென்ற கொண்டு இருந்த ஜீப், குறுக்கே வந்த இரு சக்கர வாகனத்தால் எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

ஜீப் தலைகுப்புற கவிழ்ந்து விபத்தின் சிசிடிவி வெளியீடு

இதில் ஜீப்பில் பயணித்த ராமமூர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் சிறு சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து சென்ற வந்தவாசி தெற்கு காவல் நிலைய போலீசார், சிசிடிவி காட்சிகளை கொண்டு விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

சினிமா காட்சி போல் சாலையில் ராமமூர்த்தியின் ஜீப் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளான சிசிடிவி வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க:உயர் மின்னழுத்த கம்பியில் விழுந்து விமானம் விபத்து - இருளில் மூழ்கிய நகரம்..

ABOUT THE AUTHOR

...view details