திருவண்ணாமலை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் திருவண்ணாமலை, ஜமுனாமுத்தூர் ஆகிய நிலையங்களில் படித்து தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி சிறப்பு விருந்தினராக வருகை தந்திந்திருந்தார்.
திருவண்ணாமலை, ஜமுனாமுத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் படித்து 2019ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்ற 180 ஐடிஐ மாணவ, மாணவிகளுக்கு அவர் பட்டங்களை வழங்கி பாராட்டினார்.
இவ்விழாவில் பேசிய அவர், நாம் இங்கு படிக்கச் சேரும்போது பல்வேறு நிலைகளில் இருந்து வந்திருக்கலாம், ஆனால் வெளியே செல்லும் போது அனைவருக்கும் சமவாய்ப்பு உள்ளது. தற்போது சிறு தொழில் செய்வதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. எனவே அரசு வேலை கிடைக்கவில்லை என்பதால் வீட்டிலேயே சும்மா இருக்கக்கூடாது. ஐடிஐ முடித்தவர்கள் சம்பாதித்துக் கொண்டே, குடும்பத்தை கவனித்துக் கொண்டே பொறியியல் படிப்புவரை படிப்பதற்கான நல்ல வாய்ப்பு உங்களுக்கு உள்ளது என தெரிவித்தார்.
ஐடிஐ மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா மேலும், 15 ஆண்டுகளுக்கு முன்னர் மரத்தடியில் ஒருவர் இரு சக்கர வாகன பழுது பார்க்கும் மையம் அமைத்தார். இன்று அவர் 50 பேருக்கு வேலை கொடுக்கும் தொழிற்சாலை நடத்திவருகிறார். இதுபோன்றுதான் உங்களது கனவுகள் இருக்க வேண்டும், என மாணவர்களுக்கு உத்வேகமளிக்கும் வகையில் தெரிவித்தார்.
இதையும் படிங்க:இந்து அமைப்பினர் போராட்டங்களுக்கு கண்டனம்: மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியினர் மனு