திருவண்ணாமலை:திமுக ஆட்சிக்கு வந்தால், தமிழ்நாட்டில் மின்சாரம் இரு்ககாது, அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மட்டுமே மின்சாரம் இருக்கும் என பாஜக தேசிய பொதுச்செயலாளரும் தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளருமான சி.டி. ரவி தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை போட்டியிடும் பாஜக வேட்பாளர் எஸ். தணிகைவேலை ஆதரித்து வாக்கு சேகரித்த சி.டி. ரவி பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பாஜக- அதிமுக கூட்டணி மக்களின் நண்பன் என தெரிவித்தார். திமுக மக்களின் எதிரி என்றும் அவர் கூறினார்.