திமுக சட்டப்பேரவை உறுப்பினரும் தற்போது திருவண்ணாமலை சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளராகவும் எ.வ. வேலு உள்ளார். இவர் திருவண்ணாமலையில் சொந்தமாக பொறியியல் கல்லூரி, அறக்கட்டளை, நிதி நிறுவனம் நடத்திவருகிறார்.
இந்நிலையில், இன்று (மார்ச் 25) வருமானவரித் துறையினர் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து எ.வ. வேலுவுக்குச் சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொண்டுவருகின்றனர்.
திருவண்ணாமலையில் அருணை பொறியியல் கல்லூரி, கம்பன் அறிவியல் கல்லூரி, ஜீவா வேலு இன்டர்நேஷனல் பள்ளி, சே. கூடலூரில் உள்ள எ.வ. வேலுவின் இல்லம், புதிதாக தற்போது கட்டப்பட்டுவரும் மருத்துவக் கல்லூரி, கிரானைட் நிறுவனம், அவரது உறவினர் வீடுகள் என 18-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்