திருவண்ணாமலை:தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலுவிற்குச் சொந்தமான இடங்களில் கடந்த நவம்பர் 3-ஆம் தேதி முதல் ஐந்து நாட்களுக்கு வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி இருந்தனர். இந்நிலையில், இன்று அமைச்சர் எ.வ.வேலுவிற்குச் சொந்தமான அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மீண்டும் வருமானத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.
ஏற்கனவே, அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி சீல் வைத்திருந்த நிலையில், தற்போது சீலை அகற்றி விட்டு மீண்டும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.