பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகத் திகழும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் ஒவ்வொரு மாதமும் 14 கிலோ மீட்டர் கிரிவலம் செல்வது வழக்கம். இதற்குப் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகைதருகின்றனர்.
இந்நிலையில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தளர்வுகளுடன்கூடிய முழு ஊரடங்கு நடைமுறையில் இருப்பதால், கிரிவலம் நடைபெறும் நாள்களான வரும் 23, 24 ஆகிய தேதிகளில் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது.