தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒன்றியக் குழு தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல்: தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு - indirect election postponed in thurinjapuram thiruvannamalai

திருவண்ணாமலை: துரிஞ்சாபுரம் ஒன்றியக் குழு தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் அதிமுக ஆதரவு வார்டு உறுப்பினர்கள் வராததால் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது

indirect election postponed in thurinjapuram
indirect election postponed in thurinjapuram

By

Published : Feb 1, 2020, 10:14 AM IST

திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத் தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் நேற்று ஏற்பாடு செய்திருந்தது.

அதன்படி, நேற்று காலை 10 மணி அளவில் துரிஞ்சாபுரம் ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திமுகவைச் சேர்ந்த பத்து உறுப்பினர்கள், அதிமுகவைச் சேர்ந்த ஐந்து உறுப்பினர்கள், பாமகவை சேர்ந்த ஐந்து உறுப்பினர்கள் வந்தனர். அதிமுக ஆதரவு வார்டு உறுப்பினர்கள் வராததால், நடைபெற இருந்த துரிஞ்சாபுரம் ஒன்றியக்குழு தலைவருக்கான மறைமுகத் தேர்தல் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

துரிஞ்சாபுரம் ஒன்றியக்குழு தலைவர் பதவி மறைமுகத் தேர்தல் ஒத்திவைப்பு

அதேபோல் மாவட்டத்தைச் சேர்ந்த தண்டராம்பட்டு ஒன்றியக் குழு தலைவர் தேர்தலும் நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டது. இதைக் கண்டித்து திமுக உறுப்பினர்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று முற்றுகையிடப் போவதாக தகவல் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: கோவையில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details