தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவண்ணாமலையில் மின்னல் தாக்கி இருவர் உயிரிழப்பு! - இடி மின்னல் தாக்கி இருவர் பலி

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அருகே நேற்று பரவலாக மழை பெய்த நிலையில், அங்குள்ள இரண்டு கிராமங்களில் மின்னல் தாக்கி இருவர் உயிரிழந்தனர்.

lightening
மின்னல்

By

Published : Apr 30, 2023, 12:42 PM IST

திருவண்ணாமலை:திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த வாய்க்கிலாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தினேஷ் என்ற இளைஞர், நேற்று(ஏப்.29) தனது விவசாய நிலத்தில் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக இடி, மின்னல் தாக்கியதில் தினேஷ் அங்கேயே மயங்கி விழுந்துள்ளார்.

மகன் நீண்ட நேரமாக வராததால், அவரது தந்தை வேலு வயலுக்குச் சென்று பார்த்தபோது, தினேஷ் கீழே விழுந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர், மகனை மீட்டு சே.கூடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தினேஷ் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

அதேபோல், தண்டராம்பட்டு அடுத்த காம்பட்டு அம்பேத்கர் நகரைச் சேர்ந்த முனுசாமி என்பவர், அதே கிராமத்தில் நுங்கு வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது, இடி மின்னலுடன் மழை பெய்து கொண்டிருந்த நிலையில், மின்னல் தாக்கி முனுசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து வானாபுரம் காவல் நிலைய போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார், மின்னல் தாக்கி உயிரிழந்த தினேஷ் மற்றும் முனுசாமியின் சடலங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மின்னல் தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: "கைய பாத்துக்கோங்க.. என்ன பண்ணுவாங்கனு தெரியலை" போலீஸ் தேடும் பதட்டத்துடன் ரவுடி வெளியிட்ட வீடியோ

ABOUT THE AUTHOR

...view details