தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வந்தவாசியில் வாடகை பாக்கி வைத்த கடைகளுக்குச் சீல்: ஆணையாளர் அதிரடி! - ஆணையாளர் அதிரடி

திருவண்ணாமலை: வந்தவாசியில் நகராட்சியில் வாடகை பாக்கி செலுத்தாத 17 கடைகளுக்குச் சீல் வைக்கப்பட்டது.

வந்தவாசியில் கடை வாடகை பாக்கி வைத்த கடைகளுக்கு சீல்: ஆணையாளர் அதிரடி!
வந்தவாசியில் கடை வாடகை பாக்கி வைத்த கடைகளுக்கு சீல்: ஆணையாளர் அதிரடி!

By

Published : Mar 13, 2020, 8:35 PM IST

திருவண்ணாமலை, வந்தவாசி பழைய பேருந்து நிலையம் அருகே நகராட்சிக்குச் சொந்தமான 38 கடைகள் உள்ளன. இதில் 17 கடைகளுக்கு மூன்று ஆண்டுகளாக வாடகை செலுத்தப்படவில்லை. அதனால் 35 லட்சம் ரூபாய் நிலுவையில் உள்ளது.

இது குறித்து நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி வாடகை பாக்கி செலுத்தாத 17 கடைகளின் வாடகைதாரர்களுக்கு, வாடகை உடனடியாக செலுத்த வேண்டும் என்று பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் வாடகை பாக்கி செலுத்தவில்லை.

வந்தவாசியில் வாடகை பாக்கி வைத்த கடைகளுக்கு சீல்: ஆணையாளர் அதிரடி!

இதையடுத்து நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி காவல் துறையினர் உதவியுடன் நகராட்சிக்கு வாடகை பாக்கி செலுத்தாத 17 கடைகளுக்கு 'தண்டோரா' போட்டு, கடைகளைப் பூட்டி சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் வந்தவாசி பழைய பேருந்து நிலையம் அருகே பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க...கொரோனா அச்சுறுத்தல்: பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க அரசு ஆலோசனை?

ABOUT THE AUTHOR

...view details