திருவண்ணாமலை:திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சொர்ணவாரி அறுவடைப்பருவத்தில் பரவலாக யூரியா தட்டுப்பாடு ஏற்பட்டதை அடுத்து, மாவட்ட நிர்வாகம் மற்றும் வேளாண்துறை அலுவலர்கள் மாவட்டம் முழுவதிலும் உள்ள உர விற்பனைக்கடைகளில் சோதனை செய்து அதிக விலைக்கும் மற்றும் யூரியாவினை பதுக்கி விற்றதாக, உர விற்பனை நிலையங்களுக்கும் சில தினங்களுக்கு முன்பு சீல் வைத்தனர்.
மாவட்ட நிர்வாகம் மற்றும் வேளாண்துறை அலுவலர்கள் உடனடியாக மாவட்டத்தில் உள்ள 3000-க்கும் மேற்பட்ட உர விற்பனை நிலையங்களில் ஆய்வு செய்து விவசாயிகளுக்கு யூரியா உரங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்று (அக்.10) நெற்றியில் திருநாமம் அணிந்தும், கைகளில் செம்புகளை ஏந்தியும் பிச்சை எடுக்கும் நூதனப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலையில் நாமமிட்டு விவசாயிகள் நூதனப் போராட்டம் தற்போது சம்பா பருவ நடவு நடைபெற்றுள்ள நிலையில், பயிர்களுக்குத்தேவையான யூரியா உரங்கள் தட்டுப்பாடு நிலவி வருவதாகவும், கடந்த ஆண்டு மோசடியில் ஈடுபட்ட உர விற்பனை நிலையங்கள் மீது நடவடிக்கை எடுத்து சுமார் 101 கடைகளின் உரிமங்களை வேளாண்துறை அலுவலர்கள் ரத்து செய்துள்ளதாகவும், தற்போது மாவட்டத்திற்கு யூரியா வந்த நிலையில் பல உர விற்பனை நிலையங்களில் யூரியா உரத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், மேலும் விவசாயிகள் யூரியா உரத்துடன் இணை உரங்களை வாங்கினால் மட்டுமே யூரியா விற்பனை செய்யப்படுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டினர்.
இதையும் படிங்க:குப்பை கொட்டுவதை வீடியோ எடுத்து அனுப்பினால் ரூ.200 பரிசு; மேயர் அதிரடி அறிவிப்பு