திருவண்ணாமலை ஏழாவது தெருவில் வசிக்கும் குமார் என்பவரது மகன் சதீஷ்குமார் மற்றும் சேட்டு என்பவரது மகன் சிவா ஆகிய இருவரும் டேனிஷ் மிஷன் மேல் நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர்.
தி.மலையில் பள்ளி மாணவர்கள் இருவருக்கு டெங்கு காய்ச்சல்! - டெங்கு காய்ச்சலால் 2 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி
திருவண்ணாமலை: பள்ளி மாணவர்கள் இருவருக்கு டெங்கு காய்ச்சல் கண்டறியப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
2 school students affected in dengue fever
இந்நிலையில், இருவருக்கும் கடந்த ஒரு வாரமாக காய்ச்சல் இருந்ததால், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். ஆனால் காய்ச்சல் குணமடையாததால் அரசு மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு மாணவர்களுக்கு நடத்தப்பட்ட மருத்துவ சோதனையில் டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் மருத்துவர்கள், மாணவர்கள் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளித்துவருகின்றனர்.