தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நூறு ரூபா சரக்கு இருநூறு ஆகிப்போச்சி - வேதனையில் குடிமகன்கள் - சட்டவிரோதமாக மது விற்பனை

திருவண்ணாமலை: ஊரடங்கு உத்தரவை பயன்படுத்தி நூறு ரூபாய்க்கு விற்கப்படும் மது இருநூறு ரூபாய்க்கு விற்கப்படுகிறது என குடிமகன்கள் வேதனை தெரிவிப்பது சமூக அக்கறையின்மையையே காட்டுகிறது என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

illegal-liquor-sales
illegal-liquor-sales

By

Published : Apr 3, 2020, 8:35 AM IST

கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், இதனை தடுக்க இரவு பகல் பாராமல் மக்களை காக்கும் பணியில் மருத்துவர்கள் – செவிலியர்கள், காவல்துறையினர் கடுமையாக உழைத்து வருகின்றனர். மேலும் வைரஸ் பரவலைத் தடுக்க மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் அரசுக்கு முழு ஒத்துழைப்பு தாருங்கள் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்துவரும் இந்த சூழலில் நூறு ரூபாய்க்கு விற்கப்படும் மது இருநூறு ரூபாய்க்கு விற்கப்படுகிறது என மதுப்பிரயர்கள் வேதனை தெரிவிப்பது சமூக அக்கறையின்மையையே காட்டுகிறது.

செங்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளான செ.நாச்சிப்பட்டு–மேல்ராவந்தவாடி உள்ளிட்ட பகுதிகளில் 144 தடையும் மீறி சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்கப்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

வேதனையில் குடிமகன்கள்

ஊரடங்கைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுப்படுவோர் மீது கலால்துறையினரும், மாவட்ட நிர்வாகமும் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே இப்பகுதி சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க: கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த 16 பேர் மீது வழக்கு பதிவு

ABOUT THE AUTHOR

...view details