திருவண்ணாமலை: செங்கம் பகுதியைச் சேர்ந்தவர் ரேணுகா(55), பிளஸ் 2 மட்டுமே படித்துள்ள இவர், செங்கம் பேருந்து நிலையம் அருகே கிளினிக் வைத்து மருத்துவம் பார்த்து வந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து செங்கம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் அருளானந்தம் தலைமையில் அலுவலர்கள் செங்கம் பகுதியில் சோதனை நடத்த சென்றனர்.
போலி மருத்துவர் தப்பியோட்டம்
அப்போது, அலுவலர்கள் வருவதை அறிந்து ரேணுகா மற்றும் அவரது பணியாளர்கள் தப்பியோடினர். இதையடுத்து கிளினிக்கில் உள்ள பொருட்கள் பறிமுதல் செய்து சீல் வைக்கப்பட்டது. மேலும் தப்பியோடிய போலி மருத்துவர் ரேணுகாவை காவல்துறையினர் தேடிவந்தனர்.
இந்த நிலையில் நேற்று (ஜூலை 28) கிளினிக்கிற்கு வந்த ரேணுகா அலுவலர்கள் வைத்த சீலை அகற்றிவிட்டு, மீண்டும் மருத்துவம் பார்த்துள்ளார்.