தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 26, 2021, 3:35 PM IST

ETV Bharat / state

குடியரசு தின கொண்டாட்டம்: ஊராட்சி மன்ற தலைவர் புறக்கணிப்பு

திருவண்ணாமலை: சேவூர் ஊராட்சி மன்ற தலைவரை புறக்கணித்துவிட்டு தேசிய கொடியேற்றியதாக கூறி திமுகவினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

-panchayat
-panchayat

திருவண்ணாமலை மாவட்டம் சேவூர் பகுதியில் செயல்பட்டு வரக்கூடிய அரசினர் மேல்நிலைப் பள்ளியில், இன்று (ஜனவரி 26) 72ஆவது குடியரசுத்தின கொண்டத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இது இந்து சமய அறநிலை துறை அமைச்சர் ராமச்சந்திரனின் சொந்த ஊராகும்.

இந்நிலையில் அரசு பள்ளியில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் பங்கேற்பதற்காக கிராம ஊராட்சி மன்றத் தலைவர் சர்மிளா தரணி (திமுக கட்சியை சேர்ந்தவர்) பள்ளிக்கு வந்துள்ளார். அப்போது பள்ளியின் முன் பக்க கதவு மூடப்பட்டு இருந்தது. அப்போது அங்கிருந்த காவல்துறையினரிடம் உள்ளே அனுமதிக்குமாறு கூறியுள்ளார்.

அப்போது அங்கு திரண்ட அதிமுகவினருக்கும் திமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அங்கிருந்த காவல்துறையினரிடம் ஊராட்சி மன்ற தலைவர் திமுக என்பதால் திமுகவினரை புறக்கணித்து அதிமுகவினர் தலைமை ஆசிரியரை கொடியேற்ற வைத்துள்ளதாக குற்றச்சாட்டியுள்ளனர். இந்த நிலையில், பள்ளியின் தலைமையாசிரியர் பள்ளி வளாகத்தில் வைத்து தேசிய கொடி ஏற்றினார். இதனையறிந்த திமுகவினர் ஊராட்சி மன்ற தலைவர் ஷர்மிளா தரணியை புறக்கணித்துவிட்டு அதிமுகவினரின் தூண்டுதலின்பேரில் தேசியக்கொடியை ஏற்றியதை கண்டித்து வேலூர்-ஆரணி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்கள் அதிமுக அரசை கண்டித்தும் காவல்துறையை கண்டித்தும் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details