திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள ராமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம்(67). இவரது மனைவி மல்லிகா (60), விவசாயம் செய்துவரும் ராஜமாணிக்கம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஐந்து லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக கணவன்-மனைவி இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்படும் நிலையில் நேற்று இரவு மீண்டும் தம்பதியினர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராஜமாணிக்கம், மனைவியை விறகு கட்டையால் தாக்கியதில் படுகாயமடைந்த மல்லிகா சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.