திருவண்ணாமலை: பாஜக சார்பில் ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு மாநில செயற்குழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச் ராஜா கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தவாறு இருந்தார்.
அப்போது செய்தியாளர்கள் தொடர்ந்து எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்காமல் செய்தியாளர்கள் அனைவரும் இந்து விரோதமாக நடந்து கொள்கிறீர்கள் எனவும், செய்தியாளர்களை பார்த்து இந்து மதத்திற்கு விரோதமாக செயல்படுகிறீர்கள் என்று செய்தியாளர்களை பார்த்து தெரிவித்து ”கெட் அவுட்” என்று கூறி விட்டு செய்தியாளர்கள் சந்திப்பை வேண்டும் என்று புறக்கணித்து கோபத்துடன் வெளியேறினார்.