தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறை சார்பில் 2019-20ஆம் ஆண்டிற்கான திருமண நிதியுதவியுடன் திருமாங்கல்யத்திற்கு எட்டு கிராம் தங்கம் வழங்கும் நிகழ்ச்சி திருவண்ணாமலையில் இன்று நடைபெற்றது. நான்காயிரத்து 500 பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் இந்த நிகழ்ச்சியை தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை, கீழ்பெண்ணாத்தூர், துரிஞ்சாபுரம், தண்டராம்பட்டு, செங்கம், புதுப்பாளையம், கலசபாக்கம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இரண்டாயிரத்து 191 பயனாளிகளுக்கு 6 கோடியே 57 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான தங்க நாணயமும், பட்டப்படிப்பு முடித்த ஆயிரத்து 139 பயனாளிகளுக்கு 5 கோடியே 69 லட்சத்து 50 ஆயிரம் திருமண உதவித்தொகையும், பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு படித்த ஆயிரத்து 52 பயனாளிகளுக்கு 2 கோடியே 63 லட்சம் திருமண உதவித்தொகையும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனால் வழங்கப்பட்டது.