திருவண்ணாமலை : தமிழ்நாட்டில் இரண்டாம் தர குடிமக்களாக இந்துக்கள் பார்க்கப்படுவதை தடுத்திடவும், அவர்களின் உரிமைகளை மீட்டெடுத்திடவும் இந்துக்களின் உரிமை மீட்க பிரச்சார பயணத்தை இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் மேற்கொண்டுள்ளார். இந்த பிரச்சார பயணம் கடந்த மாதம் 28 ஆம் தேதி திருச்செந்தூரில் தொடங்கியது. 37 மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் பிரச்சாரம் வருகிற 31ஆம் தேதி சென்னையில் நிறைவு பெறுகிறது.
நேற்று(ஜூலை.23) இந்த பிரச்சார பயணம் திருவண்ணாமலையில் நடைபெற்றது. மாலை 4 மணி அளவில் காந்தி சிலை முன் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியத்தை மேளதாளம், வானவேடிக்கை முழுங்க இந்து முன்னணியினர் ஊர்வலமாக அண்ணாசிலை அருகில் நடைபெற்ற பொதுக்கூட்ட மேடைக்கு அழைத்து வந்தனர். பிறகு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்து முன்னணி கூட்டத்தில் குரல் கொடுத்தவரால் பரபரப்பு பாதுகாப்பு பணிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் 4 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் உள்பட ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இக்கூட்டத்தில் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் சிறப்புரையாற்றினார்.
இதில் மாநில பொதுச்செயலாளர் நா.முருகானந்தம் திமுகவை தாக்கி பேசினார். சர்ச் சொத்து கிறிஸ்தவர்களிடம், மசூதி சொத்து முஸ்லிம்களிடம் இருக்கும்போது கோயில்கள் இந்துக்களிடம் இல்லை, சிதம்பரம் நடராஜரையும் தில்லைக்காளியையும் அருவருக்கத்தக்க வார்த்தைகளில் இழிவாக பேசி இணையதளத்தில் ஒளிபரப்பு செய்தவர்களை கைது செய்ய கோரி புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் நடராஜரை இழிவுபடுத்தியவர்களை கைது செய்யாமல் திமுக பாதுகாத்து வருகிறது.
இந்து முன்னணி கூட்டத்தில் குரல் கொடுத்தவரால் பரபரப்பு கோயில் கோயிலாக செல்லும் ஸ்டாலினின் மனைவி துர்கா, ஏன் நடராஜரை இழிவு படுத்தியவர்களை கைது செய்ய சொல்லவில்லை? இந்துக்களின் அறியாமையை பயன்படுத்திக் கொண்டு பணத்தை காட்டி திமுக ஓட்டு வாங்குகிறது. ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் தேர்தலில் போட்டியிட தைரியம் உள்ளதா? திராவிடம் என்பதை வெள்ளைக்காரர்கள் கண்டுபிடித்தது என அவர் அனல் கக்க பேசி கொண்டிருந்த போது பொதுக்கூட்டம் நடைபெற்ற இடத்தின் அருகில் உள்ள மருத்துவமனையின் மாடியிலிருந்த ஒருவர் ”திராவிடன்டா” என கூச்சலிட்டார்.
இந்து முன்னணி கூட்டத்தில் குரல் கொடுத்தவரால் பரபரப்பு இதனால் காரிலிருந்து இறங்கி வேகவேகமாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் பிரச்சனை நடந்த இடத்திற்கு சென்றார். அவரது பின்னால் காவல்துறை அலுவலர்கள், அதிரடிப்படையினர் சென்றனர். தொடர்ந்து அந்த நபர் கூச்சலிட்டபடி இருந்ததால் ஆத்திரம் அடைந்த இந்து முன்னணி தொண்டர்கள் மருத்துவமனை மாடி மீது ஏற முயன்றனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
யாரும் பிரச்சனை செய்ய வேண்டாம், அமைதியாக உட்காருங்கள் என மைக்கில் பொதுச்செயலாளர் முருகானந்தம் சொல்லியபடி இருந்தார். ஆனாலும் இந்து முன்னணியினர் மாடியை நோக்கி சத்தம் போட்டுக் கொண்டே இருந்தனர். அவர்களை நிர்வாகிகள் சமாதனப்படுத்தி உட்கார வைத்தனர். அந்த மருத்துவமனை முன்பு கூட்டம் முடியும் வரை காவல்துறையினர் நிறுத்தப்பட்டிருந்தனர். தொடர்ந்து முருகானந்தம் பேசினார்.
இந்து முன்னணி கூட்டத்தில் குரல் கொடுத்தவரால் பரபரப்பு திமுகவினர் திட்டமிட்டு குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். நாங்களும் திமுக பொதுக்கூட்டத்தில் சத்தம் போட்டால் என்ன ஆகும்? கூச்சலிட்ட நபர் மேடை அருகிலிருந்து பேசிக் கொண்டே சென்றிருக்கிறார். இதை காவல்துறையினர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர் என அவர் காவல்துறையினரை குற்றம் சாட்டி பேசினார்.
இதையும் படிங்க:'சம்சாரம் இல்லாமல் கூட இருக்கலாம்... ஆனால் மின்சாரம் இல்லாமல் இருக்க முடியாது' - திமுகவை கலாய்த்த கடம்பூர் ராஜு