தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து: பட்டாசு வெடித்து இந்து முன்னணியினர் கொண்டாட்டம் - Article 370

திருவண்ணாமலை: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து சட்டம் ரத்து செய்யப்பட்டதை இந்து முன்னணியினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

hindu munnani

By

Published : Aug 6, 2019, 5:57 AM IST

காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கி ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிதான் என்று இன்று நாடாளுமன்றத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனையடுத்து திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் முன்பாக இந்து முன்னணியைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.

இந்து முன்னணியினர் கொண்டாட்டம்

அப்போது இந்து முன்னணி அமைப்பின் திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் அருண்பேசுகையில், இந்து முன்னணியின் 'ஒரே நாடு ஒரே இந்தியா' என்கின்ற குறிக்கோளுக்கு வலுசேர்க்கும் வகையில் உள்ள இந்த அறிவிப்பை நாங்கள் வரவேற்கின்றோம் என்று தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details