சித்திரை மாதத்தின் முதல் பவுர்ணமியான இன்று அனைத்து இந்து கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் கிரிவல பூஜையில் கலந்து கொள்ள தமிழ்நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வாகனங்கள் மூலம் படையெடுத்து வருகின்றனர். இதனால் நகர் முழுவதும் விழா கோலம் பூணடுள்ளது. இதையடுத்து திருவண்ணாமலைக்கு ஒரே நேரத்தில் வாகனங்கள் மூலம் வந்ததால், திண்டிவனம் சாலையில் சுமார் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
'சித்ரா பவுர்ணமி' 5 கிலோமீட்டர் அணிவகுத்து நின்ற வாகனங்கள்! - 5கிலோமீட்டர தூரம்
திருவண்ணாமலை: சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு கிரிவல பூஜையில் கலந்து கொள்ள வெளியூர்களில் இருந்து ஒரே நேரத்தில் பக்தர்கள் வாகனங்கள் மூலம் திருவண்ணாமலைக்கு வந்ததால் சுமார் 5 கிலோமீட்டர் தொலைவிற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
போக்குவரத்து நெரிசல்
போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகளும், பயணிகளும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களும் இந்த நெரிசலில் சிக்கி தவித்தது குறிப்பிடத்தக்கது.