திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக மாலை நேரத்தில் பலத்த மழை பெய்துவருவதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தோடியது. இதனால் பொதுமக்களும் விவசாயிகளும் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பெய்துவரும் மழையால் பெருகிவரும் மகிழ்ச்சி...! - தொடர்ந்து மூன்றாவது நாளாக திருவண்ணாமலையில் மழை
திருவண்ணாமலை: தொடர்ந்து மூன்றாவது நாளாக பெய்துவரும் மழையால் பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருவண்ணாமலையில் கனமழை
இதேபோல் செங்கம், தண்டராம்பட்டு, ஆரணி, கீழ்பென்னாத்தூர், போளூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்த காரணத்தால் குளம், ஏரிகள் உள்ளிட்ட நீர் நீலைகளில் நீர் மட்டம் உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.