திருவண்ணாமலை மாவட்டம் களம்பூர் பேரூராட்சியில் வசித்துவரும் நெசவாளர் வேல்முருகன் இருதய நோயினால் பாதிக்கப்பட்டு குடும்ப வறுமையின் காரணமாக சிகிச்சைப் பெற முடியாமல் தவித்துவந்தார். இவரது மகன் கோகுல் தசைசிதைவு நோயினால் நடக்க முடியாமல் சிறுவயதிலிருந்து பெற்றோர்களின் கவனிப்பில் வளர்ந்துவருகிறார்.
இந்தச் சூழ்நிலையில் கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு வேல்முருகனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு வேலூர் நாராயணிபுரத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு இருதய நோய், நீரிழிவு நோய், இடது வெண்ட்ரிக்கிள் செயலிழப்பு ஆகியவை இருப்பது கண்டறியப்பட்டது.
மேற்கொண்டு வேல்முருகனுக்கு சிகிச்சை செய்வதற்கு கூடுதலாக 2.5 லட்சம் பணம் தேவைப்பட்டதால் மனைவி லதா என்ன செய்வது என்று தெரியாமல் மிகவும் மன வேதனையில் இருந்துவந்துள்ளார்.
சிகிச்சைக்கு அழைத்து செல்லப்படும் வேல்முருகன் இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து தனது கணவர் நிலை குறித்து எடுத்துரைத்து கண்ணீர் மல்க உதவி செய்யுமாறு கேட்டுக்கொண்டார். மாவட்ட ஆட்சியர் லதாவிற்கு ஆறுதல் அளித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறி அனுப்பிவைத்தார்.
மேல் சிகிச்சைக்காக வழியனுப்பிய மாவட்ட ஆட்சியர் அதன்பின் வேல்முருகன், லதா ஆகியோர் மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகம் வரவழைக்கப்பட்டு வேல்முருகனை சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் தமிழ்நாடு அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், தனியார் தொண்டு நிறுவன உதவியுடன் மேல் சிகிச்சை மேற்கொள்வதற்கு வழியனுப்பி-வைக்கப்பட்டார்.