தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சினிமா பாடல் மூலம் கரோனா விழிப்புணர்வு - தலைமை காவலர் செயலுக்கு பாராட்டு!

கரோனா தொற்று குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தலைமை காவலர் ஒருவர் திரைப்படப் பாடலை விழிப்புணர்வு பாடலாக மாற்றிப் பாடியுள்ளார்.

கரோனா விழிப்புணர்வு பாடல்
கரோனா விழிப்புணர்வு பாடல்

By

Published : May 29, 2021, 2:08 PM IST

திருவண்ணாமலை: திரைப்படப் பாடலை கரோனா விழிப்புணர்வு பாடலாக மாற்றி, தலைமை காவலர் ஒருவர் பாடும் பாடல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

கடந்த ஆண்டு முதல் இந்தியாவை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா பெருந்தொற்றால், உயிரிழப்பு, பொருளாதார பாதிப்பு என பெரும் பிரச்னை ஏற்பட்டுள்ளன. தற்போது கரோனா தொற்றின் இரண்டாவது அலையில் அதிக அளவில் பாதிப்புகளை இந்தியா சந்தித்து வருகிறது. இந்த இரண்டாவது அலை கரோனா தொற்றால் பெரும் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் மனஉளைச்சலுக்கும் பாதிப்புக்கும் ஆளாகி உள்ளனர்.

கரோனா விழிப்புணர்வு பாடல்

திருவண்ணாமலை மாவட்டத்தில், கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, அந்த வகையில் நேற்று (மே.28) ஒரே நாளில் 734 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் மாவட்டத்தில் உள்ள 15 கரோனா மையங்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 399 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

கரோனா விழிப்புணர்வு குறித்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் காவல் நிலையத்தின் தலைமை காவலர் ஏழுமலை என்பவர், திரைப்பட பாடல் ஒன்றை கரோனா விழிப்புணர்வு பாடலாக மாற்றிப் பாடியுள்ளார். இந்தப் பாடலின் வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. இப்பாடல் பொதுமக்களிடையேயும், காவல்துறை வட்டாரத்திலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதையும் படிங்க: '+2 தேர்வு எப்படி நடத்தப்படும்?' - அன்பில் மகேஷ் விளக்கம்

ABOUT THE AUTHOR

...view details