தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நிலத்தை உழுது வாக்கு சேகரித்த கலசப்பாக்கம் எம்எல்ஏ - ADMK

திருவண்ணாமலை: கலசப்பாக்கம் தொகுதியில், போட்டியிடும் அதிமுக வேட்பாளரும் எம்எல்ஏவுமான பன்னீர் செல்வம் தேர்தல் பர்பபுரையின் போது, விவசாயி ஒருவரின் நிலத்தை டிராக்டரில் உழுது அசத்தினார்.

விவசாய நிலத்தில் டிராக்டர் ஓட்டி வாக்குச்சேகரித்த அதிமுக வேட்பாளர்
விவசாய நிலத்தில் டிராக்டர் ஓட்டி வாக்குச்சேகரித்த அதிமுக வேட்பாளர்

By

Published : Mar 24, 2021, 1:00 AM IST

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் வாக்கு சேகரிப்பு பணியில் மும்முரமாக ஈடுபட்டுவருகின்றனர். துணி துவைத்து கொடுத்தல், டீ போட்டு கொடுத்தல், உணவகத்தில் தோசை சுடுதல் உள்ளிட்ட வேடிக்கையான சம்பவங்களையும் சில வேட்பாளர்கள் அரங்கேற்றியுள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பன்னீர்செல்வம் இன்று தேர்தல் பரப்புரையின்போது, விவசாயி ஒருவரின் நிலத்தை டிராக்டரில் உழுது அசத்தினார். விவசாயிகளிடம் தான் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றும் தனக்கு வாக்களிக்குமாறும் கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

விவசாய நிலத்தில் டிராக்டர் ஓட்டி வாக்குச்சேகரித்த அதிமுக வேட்பாளர்

தொடர்ந்து அப்பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர், நவாப்பாளையம் கிராமத்திலுள்ள நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்படும், கால்நடைகள் மருத்துவமனை உருவாக்கப்படும், சட்டப்பேரவை உறுப்பினர் நிதியிலிருந்து, சமுதாயக் கூடம் அமைத்து தரப்படும் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார்.

இதையும் படிங்க: 'எய்ம்ஸ் மருத்துவமனையை கையோடு எடுத்து வந்து விட்டேன்!'

ABOUT THE AUTHOR

...view details