திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மழையூர் ஊராட்சியில் சர்வதேச மகளிர் தினத்தை ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா தொண்டு நிறுவனம், மகளிர் சுய உதவிக் குழுக்களுடன் இணைந்து கொண்டாடியது.
மழையூரில் மகளிர் தினவிழா கொண்டாட்டம் சிறப்பு - திருவண்ணாமலை: வந்தவாசி அடுத்த மழையூர் ஊராட்சியில் சர்வதேச மகளிர் தினவிழா கொண்டாட்டப்பட்டது.
திருவண்ணாமலை: வந்தவாசி அடுத்த மழையூர் ஊராட்சியில் சர்வதேச மகளிர் தினவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
மழையூர் ஊராட்சி மன்றத் தலைவர் சரஸ்வதி முனிரத்தினம் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பெண்களுக்கான லெமன் ஸ்பூன், தண்ணீர் பாட்டில் நிரப்புதல், கல்லடித்தல், இசை நாற்காலி (மியூசிக் சேர்), பலூன் வெடித்தல், ஓட்டம் (ரன்னிங்) முதலான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. போட்டியில் வெற்றிபெற்ற பெண்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவில் கால்நடை மருத்துவர் அபிராமி, கிராம சுகாதார செவிலியர் மந்திரமாலை, பள்ளி ஆசிரியர் ரேவதி, இந்தியன் வங்கி கிளை மேலாளர் ராஜேந்திர பிரசாத், கூட்டுறவு வங்கி மேலாளர் வெங்கடேசன், ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா திட்ட மேலாளர் மரிய வசந்தகுமார், உதவி திட்ட மேலாளர் ஆனந்தன் உஷாநந்தினி ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். இதில் 150-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர்.