தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேன்கூட்டை அலட்சியம் செய்த அரசுப்பள்ளி நிர்வாகம் ...தேனீக்கள் கடித்து 31 மாணவர்கள் அவதி! - தேன்கூட்டை அலட்சியம் செய்த அரசுப்பள்ளி

திருவண்ணாமலையில் , அரசு பள்ளியில் தேனீக்கள் கடித்து 36 பேர் பாதிப்படைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனீ கடித்து 31 மாணவர்கள் அவதி
தேனீ கடித்து 31 மாணவர்கள் அவதி

By

Published : Jun 21, 2022, 1:37 PM IST

திருவண்ணாமலை: மாவட்டம் மங்கலம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை 1200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.கோடை விடுமுறைக்குப் பிறகு கடந்த 13 ஆம் தேதி வகுப்புகள் தொடங்கித் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், மூன்றாம் தளத்தில் உள்ள எட்டாம் வகுப்பறையில் மாணவர்கள் மின்விசிறியை இயக்கியுள்ளனர்.

அப்போது மின்விசிறியில் இருந்து உருவான சத்தத்தினால் வகுப்பறை அருகே இருந்த தேன்கூடு கலைந்து தேனீக்கள் மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்களைக் கடித்தன. இதையடுத்து 11 மாணவர்கள், 20 மாணவிகள் மற்றும் 5 ஆசிரியர்கள் என 36 பேர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பள்ளி வளாகத்தில் மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்களைத் தேனீக்கள் கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:அதிரடி சோதனையில் இறங்கிய அதிகாரிகள்..பல லட்ச மதிப்பிலான ரேஷன் பொருட்கள் திருடிய 171 பேர் கைது!

ABOUT THE AUTHOR

...view details