திருவண்ணாமலை மாவட்டம் சு.நல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருபவர் நளாயினி. இவரது தாயும், தந்தையும் கூலி வேலை செய்து ஏழ்மையான சூழ்நிலையில் குடும்பம் நடத்தி வருகின்றனர்.
நளாயினி மூன்றாம் வகுப்பு படிக்கும்போது, தினமும் பத்து திருக்குறள் மூன்று முறை படிக்க வேண்டும், அடுத்த நாள் படித்த திருக்குறளை ஒப்பிவிக்க வேண்டும் என ஆசிரியர் பயிற்சி அளித்துள்ளார். இது நளாயினியை ஊக்கப்படுத்தியுள்ளது. மேலும், தான் அனைத்து திருக்குறளையும் படித்து பார்க்காமல் ஒப்புவிக்க பயிற்சி அளிக்குமாறு ஆசிரியரிடம், நளாயினி கேட்டுக் கொண்டார். இதன்படி, மாணவி நளாயினிக்கு 1330 குறள்களையும் படித்து ஒப்புவிக்கும் பயிற்சியை படிப்படியாக ஆசிரியர்கள் அளித்துள்ளனர்.
இதனையடுத்து நளாயினி நான்காவது படிக்கும்போது பள்ளிக்கல்வித் துறை சார்பாக நடைபெற்ற கலை திருவிழாவில் கலந்துகொண்டு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் முதல் பரிசு பெற்றார்.