தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க திருவண்ணாமலை மாவட்டம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது. இதில் 13 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
அரசு ஊழியர்களுக்கு பழைய முறையிலான ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.