திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கண்ணமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு முடித்து 12ஆம் வகுப்பு செல்லும் மாணவன் அமர்நாத், ஏப்ரல் மாதம் கரூரில் நடைபெற்ற மாநில அளவிலான ஐந்தாவது 'யூத் ரூரல் கேம்ஸ் 2019' ஜூடோ போட்டியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார்.
ஜூடோவில் அரசுப் பள்ளி மாணவன் சாதனை! - முதன்மைக்கல்வி அலுவலர்
திருவண்ணாமலை: தேசிய அளவில் ஜூடோ போட்டியில் முதலிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவர், திருவண்ணாமலை முதன்மைக் கல்வி அலுவலரிடம் நேற்று வாழ்த்து பெற்றார்.
அமர்நாத்
இதே போன்று பஞ்சாப் மாநிலம் அம்ரிஸ்டர் என்ற இடத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஆறாவது தேசிய யூத் ரூரல் கேம்ஸ் 2019 ஜூடோ போட்டியில் தேசிய அளவில் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். இதன் மூலம் சர்வதேச அளவிலான ஜூடோ போட்டிக்கு தகுதிபெற்றார். இந்நிலையில் சர்வதேச அளவில் தகுதி பெற்றதற்காக திருவண்ணாமலை முதன்மைக் கல்வி அலுவலரிடம் நேற்று வாழ்த்து பெற்றார்.