தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொடர்ந்து கள்ளச்சாராய வியாபாரம் செய்தவர் குண்டர் சட்டத்தில் கைது! - tiruvannamalai latest news

திருவண்ணாமலை: வழக்குகளை கண்டு அஞ்சாமல் கள்ளச்சாராய வியாபாரத்திலேயே தொடர்ந்து கவனம் செலுத்தி வந்த நபரை காவல் துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

goondas prison liquor seller tiruvannamalai
goondas prison liquor seller tiruvannamalai

By

Published : Oct 9, 2020, 11:39 AM IST

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் தாலுகா, குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கண்ணையன் மகன் விஜயகாந்த் (வயது 30). இவர் மீது பலமுறை வழக்குப்பதிவு செய்தும் தொடர்ந்து கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபட்டிருந்த இவரை கண்ணமங்கலம் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், வழக்குகளை கண்டு அஞ்சாத விஜயகாந்தின் சட்டவிரோத செயலை கட்டுப்படுத்த வேண்டி குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

அதன்படி, தொடர்ந்து கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்த விஜயகாந்த்தை குண்டர் தடுப்புச் சட்டத்தில் காவல் துறையினர் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில், இந்த ஆண்டில் மட்டும் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட 109 நபர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின்படி கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:

பரமத்தி வேலூர் அருகே பட்டா மாறுதல் செய்ய லஞ்சம்: விஏஓ கைது

ABOUT THE AUTHOR

...view details