தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா பரவல்: திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலத்திற்குத் தடை - கரோனா விவரங்கள்

திருவண்ணாமலை: கரோனா பரவலைக் கட்டுபடுத்த முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால் பக்தர்கள் , பொதுமக்கள் பௌர்ணமி கிரிவலம் வர வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.

கரோனா பரவல்: திருவண்ணாமலைக்கு பௌர்ணமி கிரிவலம் வர தடை!
கரோனா பரவல்: திருவண்ணாமலைக்கு பௌர்ணமி கிரிவலம் வர தடை!

By

Published : May 24, 2021, 10:05 PM IST

தமிழ்நாட்டில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. இதனால், திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் நடைபெறும் நாள்களான மே 25ஆம் தேதி இரவு 08.02மணி முதல் , மே 26ஆம் தேதி மாலை 05.36 மணி வரை பக்தர்கள் கிரிவலம் வருவதற்கு அனுமதி கிடையாது.

எனவே, தமிழ்நாடு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி கரோனா பரவலைக் கட்டுபடுத்தவும் , பொதுமக்களைப் பாதுகாக்கவும் பக்தர்கள், பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதையும் படிங்க:'அரசியல்வாதிகளின் இல்லத் திருமண விழாவுக்கு மட்டும் அனுமதி' - பொதுமக்கள் குற்றச்சாட்டு!

ABOUT THE AUTHOR

...view details