தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கூட்டுறவு கடன் சங்கத்தில் நகை, பணம் கையாடல்! - காசாளர், தலைவர்

திருவண்ணாமலை: தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் அடகு வைத்த நகை, பணத்தை கையாடல் செய்த காசாளர், தலைவரை மாற்றக்கோரி உறுப்பினர்கள் போராட்டம் செய்தனர்.

fraud in the agricultural cooperative credit union
fraud in the agricultural cooperative credit union

By

Published : Jul 29, 2020, 11:00 PM IST

திருவண்ணாமலை அடுத்த கீரனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பணிபுரியும் காசாளர் கல்யாணி ரூபாய் 3 லட்சத்து 60 ஆயிரம், 10 பவுன் தங்க நகை கையாடல் செய்ததாக அந்த கூட்டுறவு சங்கத்தின் 10 உறுப்பினர்கள் தலைவரை நீக்க கூறியும், காசாளரை பணியிடை நீக்க கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சங்கத்தின் கதவை இழுத்து மூடினர். அதன் பின்னர் கூச்சல், குழப்பம், வாக்குவாதத்தில் இடையே, நகை, பணத்தை ஒப்படைப்பதாக காசாளர், தலைவர் ஒப்புக்கொண்டதால் பின்னர் பத்து உறுப்பினர்களும் சமரசம் அடைந்தனர்.

இதையடுத்து இந்த போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

ABOUT THE AUTHOR

...view details