தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'96' பட பாணியில் அழகிய சந்திப்பு.. அரசு பள்ளிக்கு அள்ளி வழங்கிய முன்னாள் மாணவர்கள்! - Tiruvannamalai Govt boys School

திருவண்ணாமலை நகராட்சி ஆன்கள் மேல்நிலைப்பள்ளியில் 30 ஆண்டுகளுக்கு முன்னாள் கல்வி பயின்ற மாணவர்கள் தங்களது குடும்பத்திருடன் ஆட்டோகிராஃப், 96 திரைப்படங்கள் ஒன்றுகூடல்(ReUnion) நிகழ்ச்சி நடைபெற்றது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jan 30, 2023, 12:31 PM IST

அரசு பள்ளிக்கு அள்ளி வழங்கிய முன்னாள் மாணவர்கள்!

திருவண்ணாமலை: 1986 முதல் 1992 வரை திருவண்ணாமலை நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் நேற்று(29.01.2023) தாங்கள் படித்த பள்ளியில் ஒன்று சேர்ந்து தங்களது நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

தாங்கள் படித்த பள்ளிக்கு தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மாணவர்கள் மதிய உணவு உண்பதற்கான இருப்பிட வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, மைக், ஸ்பீக்கர், பிரிண்டர் உள்ளிட்ட பொருட்களை வழங்கினர். மேலும் தாங்கள் பயிலும் போது தங்களுக்கு பாடம் கற்பித்த ஆசிரியர்களை கௌரவிக்கும் விதமாக அவர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கி கௌரவித்தனர்.

"1986ம் ஆண்டு தாங்கள் பயிலும் போது நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அதிகப்படியான மாணவர்கள் பயின்று வந்த நிலையில் தற்போது இந்த பள்ளியில் சுமார் 300 மாணவர்கள் மட்டுமே படிக்கும் சூழ்நிலை உள்ளதாகவும், அரசு பள்ளியின் தரத்தை உயர்த்தி மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும்" என முன்னாள் மாணவர்கள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக யாருக்கு ஆதரவு?

ABOUT THE AUTHOR

...view details