திருவண்ணாமலைக்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் வருகைதந்து இரண்டு முதல் ஆறு மாதங்கள் தங்கி செல்வார்கள். அதன்படி திருவண்ணாமலையில் தற்போது 71 வெளிநாட்டினர்கள் தங்கியுள்ளனர். இவர்கள் அனைவரும் கடந்த ஜனவரி மாதத்திற்கு முன்பாக திருவண்ணாமலைக்கு வந்தவர்கள். கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
தற்போதைய சூழ்நிலையின் அடிப்படையில் இவர்கள் திருவண்ணாமலை நகரினை விட்டு வெளியேற முடியாத நிலையில், ஜெர்மனி, ஸ்வீடன் நாட்டினைச் சேர்ந்த 24 நபர்கள் அவர்களது நாட்டிற்கு அழைத்து செல்ல தங்களது தூதரகத்தின் மூலம் உதவி கேட்டதன் அடிப்படையில் அந்தந்த நாட்டு அரசாங்கங்கள் இவர்களை அழைத்து செல்ல உறுதியளித்தது.