தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல தடை - திருவண்ணாமலை செய்திகள்

திருவண்ணாமலையில் புராட்டாசி மாத பௌர்ணமிக்கு பக்தர்கள் கிரிவலம் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

forbidden to go to girivalam in Thiruvannamalai
forbidden to go to girivalam in Thiruvannamalai

By

Published : Sep 19, 2021, 11:59 AM IST

Updated : Sep 19, 2021, 1:47 PM IST

திருவண்ணாமலை: பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் 14 கிலோ மீட்டர் கொண்ட கிரிவல பாதையில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி நாட்களில் கிரிவலம் செல்வதற்காக பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்களும், பொதுமக்களும் வருகை புரிந்து வருகிறார்கள்.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால், புராட்டாசி மாத பௌர்ணமி கிரிவலம் வரும் நாட்களான செப்டம்பர் 20ஆம் தேதி திங்கள்கிழமை அதிகாலை 5.20 மணி முதல் 21ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.51 மணி வரை கிரிவலம் வருவதற்கு அனுமதி கிடையாது. எனவே பக்தர்கள் கிரிவல செல்ல வரவேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசின் கரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி, கரோனா வைரஸ் நோய் தொற்று பரவல் கட்டுபடுத்தவும், பொதுமக்களை பாதுகாக்கவும் எடுக்கப்பட்டுள்ள மேற்கண்ட நடவடிக்கைக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பா. முருகேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Last Updated : Sep 19, 2021, 1:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details