தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கிரிவலம் வரும் பக்தர்களின் வசதிக்காக நடைபாதை நிழற்குடை திறப்பு! - இசை அமைப்பாளர்

திருவண்ணாமலை: பக்தர்களின் நன்மைக்காக கிரிவலப் பாதையில் அமைக்கப்பட்டிருந்த நிழற்குடைகளை மாவட்ட ஆட்சியர் திறந்துவைத்தார்.

girivalam path tensile roof tiruvannamala
girivalam path tensile roof tiruvannamala

By

Published : Jan 15, 2020, 9:51 AM IST

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் குபேர லிங்கம் அருகில் 18 லட்ச ரூபாய் மதிப்பிலான டென்சைல் ரூப் என்று அழைக்கப்படுகின்ற நடைபாதை நிழற்குடை பக்தர்களுக்காக நிறுவப்பட்டுள்ளது.

இன்று காலை கிரிவலப்பாதை குபேரலிங்கம் அருகில் புதியதாக நிறுவப்பட்டுள்ள நடைபாதை நிழற்குடையை பிரபல இசை அமைப்பாளர் அனிருத்தின் தந்தை நடிகர் ரவிச்சந்திரனால் பக்தர்களின் பயன்பாட்டிற்கு திறந்துவைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கே.வி. ரமணன், ஆகாஷ் முத்துகிருஷ்ணன், மாவட்ட ஊராட்சி முதன்மைத் திட்ட இயக்குநர் ஜெயசுதா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்கள்.

கிரிவலம் வரும் பக்தர்களின் வசதிக்காக நடைபாதை நிழற்குடை திறப்பு

இதேபோன்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கிரிவலப்பாதையில் ஐந்து இடங்களில் டென்சைல் ரூப் அமைக்கப்பட்டுள்ளது. ஆறாவது இடத்தில் டென்சைல் ரூப் திரைப்பட நடிகர் ரவிச்சந்திரனால் வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:பொங்கல் தின சிறப்புப் பேருந்து: முன்பதிவில் 10.80 கோடி ரூபாய் வருமானம்

ABOUT THE AUTHOR

...view details