தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 27, 2021, 10:50 AM IST

ETV Bharat / state

100% வாக்குப்பதிவை வலியுறுத்தி உணவுத் திருவிழா!

திருவண்ணாமலை மாவட்டத்தில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தும் வகையில் நடைபெற்ற விழிப்புணர்வு உணவு திருவிழாவை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி திறந்துவைத்தார்.

Food festival emphasizing 100% voting awareness at thiruvannamalai
Food festival emphasizing 100% voting awareness at thiruvannamalai

திருவண்ணாமலை: நடைபெற உள்ள 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 100 சதவீதம் வாக்களிப்பதின் அவசியத்தை வலிறுத்தி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இதைத்தொடர்ந்து, 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் முன்பு நடைபெற்ற உணவு கண்காட்சி திருவிழாவில் 100 கிலோ எடை கொண்ட பல்வேறு விதமான கேக்குகள் வகைப்படுத்தப்பட்டிருந்தன.

100% வாக்குப்பதிவை வலியுறுத்தி உணவுத் திருவிழா

மாவட்டத்தில் உள்ள உணவகங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து, இந்திய தேர்தல் ஆணையம், மின்னனு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிப்பது போன்று மக்ககளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் புகைப்படங்களையும், எனது வாக்கு விற்பணைக்கு அல்ல, வாக்களிப்பது எனது கடமை, 100 சதவீதம் வாக்களிப்போம் என்ற வாசகங்களை கேக் மற்றும் பிஸ்கேட் வடிவில் அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்த உணவுத் திருவிழாவில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கலந்துகொண்டு 100 சதவீதம் வாக்களிப்போம் என்ற வாசகம் பொருந்திய வடிவிலான கேக்கை வெட்டி அனைவருக்கும் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

ABOUT THE AUTHOR

...view details