திருவண்ணாமலை மாவட்ட இசைக்கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் வாழ்வாதார கோரிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டம் முழுவதிலுமிருந்து கிராமிய இசைக் கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதில் குறிப்பாக திருமண விழாக்களில் டி.ஜே., என்னும் மேற்கத்திய இசையை அனுமதிக்கக்கூடாது, கோயில் திருவிழாக்களில் இசை நிகழ்ச்சி நடத்துவதற்கு அனுமதி தர வேண்டும், கிராமிய இசைக்கலைஞர்களுக்கு இலவச பஸ் பாஸ், ரயில் பாஸ் , மாத ஓய்வூதியம், மருத்துவ காப்பீடு, விபத்து காப்பீடு போன்றவை வழங்க வேண்டும். கலைஞர்களுக்கு இலவச காங்கீரிட் வீடு, அரசு நிகழ்ச்சிகளில் இசை நிகழ்ச்சியை நடத்துவதற்கு அனுமதி தர வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.