தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புரட்டாசி முதல் சனிக்கிழமை: பூத நாராயண பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு! - பூத நாராயண பெருமாள் கோயிலில் சிறப்பு அபிஷேகம்

திருவண்ணாமலை: புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு பூத நாராயண பெருமாள் திருக்கோயிலில் சிறப்பு திருமுழுக்கு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் துளசி மாலையுடன் சாமி தரிசனம்செய்தனர்.

purattasi
purattasi

By

Published : Sep 19, 2020, 2:14 PM IST

திருவண்ணாமலை நகரில் உள்ள அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயிலின் நான்கு மாடவீதிகளில் அமைந்துள்ள பூத நாராயண பெருமாள் திருக்கோயிலில் புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு பூத நாராயண பெருமாள் சுவாமிக்கு சிறப்பு திருமுழுக்கு, ஆராதனைகள் ஏராளமான பக்தர்கள் முன்னிலையில் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பூத நாராயண பெருமாளை வழிபட வருகைதந்த பக்தர்கள் சாமிக்கு உகந்த துளசி மாலை, பல்வேறுவிதமான மலர்கள் அடங்கிய பூமாலைகள் கொண்டு சாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

சாமி தரிசனம் செய்த பக்தர்கள் துளசி பிரசாதம் பெற்றுச் சென்றனர். கோயிலுக்கு சாமி தரிசனம் செய்யவந்த பக்தர்கள் அனைவரின் வெப்பம் பரிசோதிக்கப்பட்டு, பின்னர் அவர்கள் கைகளில் சானிடைசர் தெளிக்கப்பட்டு கரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

ABOUT THE AUTHOR

...view details