திருவண்ணாமலையில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபம் தினத்தன்று 2668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும், இந்த தீப திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடி தீப தரிசனம் காணுவது வழக்கம். மேலும், இந்த மகாதீப மலையில் ஏற வனத்துறை தடை விதித்துள்ளது.
இந்நிலையில் நேற்று மகாதீபம் மலையில் மர்ம நபர்கள் தீ வைத்ததால் பல ஏக்கர் பரப்பளவில் இருந்த மூலிகை மரங்கள் முற்றிலும் எரிந்து நாசமானது. இது குறித்து தீயணப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், வனத் துறையினர், சமூக ஆர்வலர்கள் ஒன்று சேர்ந்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.