திருவண்ணாமலை:செங்கம் பேரூராட்சி பகுதியில் இயங்கிவரும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை சுமார் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
மழையின் காரணமாகப் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தும், முறையான பாதுகாப்பு ஏற்படுத்தி பள்ளி பூட்டி வைக்கப்படாமல் இருந்தது. இதனால் அடையாளம் தெரியாத மாணவர்கள் வெளிப்பகுதியில் இருந்து மின்சார ஒயரை திருடி வந்து பள்ளியில் வைத்து எரித்து, விலைக்கு விற்றுள்ளனர்.
பள்ளி மாணவர்களுக்குத் தேவையான காலணி, கம்ப்யூட்டர், டேபிள், சேர், புத்தகங்கள் போன்ற உபகரணங்கள் பூட்டி வைக்கப்பட்டுள்ள அறையின் அருகாமையில் மின்சார ஒயர்களை எரிக்கப்பட்டதால், உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் திடீரென தீப்பற்றி எரிந்ததாகப் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.