தேனிமலை அருகேயுள்ள லோகலட்சுமி கேஸ் புக்கிங் அலுவலகத்தில் நேற்று கேமராவின் வயர்கள் உராய்வினால் மின்கசிவு ஏற்பட்டு தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளன.
கேஸ் புக்கிங் அலுவலகத்தில் தீ விபத்து! - திருவண்ணாமலை
திருவண்ணாமலை: தேனிமலை அருகே உள்ள தனியார் கேஸ் புக்கிங் அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கேஸ் புக்கிங் அலுவலகத்தில் தீவிபத்து!
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அலுவலகப் பணிப்பெண் வெளியே ஓடிவந்து தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், உடனடியாக தீயை அணைத்தனர். இருப்பினும் அந்த அலுவலகத்தின் கண்ணாடி அறைகள் வெடித்து சிதறியுள்ளன.
ஏராளமான பொருட்கள், ஆவணங்கள் எரிந்து சாம்பலாகின. கேஸ் அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் அருகே உள்ள பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர்.